இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (19.02.2026) : அரசியலில் செல்வாக்கு உயரும்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

பிப்ரவரி 19

கிழமை வியாழக் கிழமை

தமிழ் வருடம் விசுவாவசு

தமிழ் மாதம் மாசி

நாள் 7

ஆங்கில தேதி 19

மாதம் பிப்ரவரி

வருடம் 2026

நட்சத்திரம் இன்று இரவு 10-03 வரை பூரட்டாதி

பின்பு உத்திரட்டாதி

திதி இன்று மாலை 5-12 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம் சித்த யோகம்

நல்ல நேரம் காலை 10-30 to 11-30

நல்ல நேரம் மாலை 12-30 to 01-30

ராகு காலம் பிற்பகல் 1-30 to 3-00

எமகண்டம் காலை 6-00 to 07-30

குளிகை காலை 09-00 to 10-30

கௌரி நல்ல நேரம் காலை -

கௌரி நல்ல நேரம் மாலை 6-30 to 07-30

சூலம் தெற்கு

சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். தம்பதிகள் அன்பு அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். இருப்பினும், சமாளிப்பீர்கள். உடல் உற்சாகத்துடன் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

ரிஷபம்

மேலதிகாரிகள் உத்யோகஸ்தர்களின் பணியிடத்தில் உங்களை கவனிப்பர். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் செழிப்பு உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். ஆன்மீகத்தில் மனம் நாடும். மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கடகம்

பணியிடத்தில் உத்யோகஸ்தர்களுக்கு மதிப்பு கூடும். கடனில் ஒரு பகுதியை அடைப்பர். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்த பணம் விரைவில் வந்து சேரும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

சிம்மம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். தந்தைகள் தங்கள் பொறுப்புணர்ந்து தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

துலாம்

வியாபாரத்தில் செலவுகள் கூடும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். கணவர் வீட்டார் பாராட்டுவர். குடும்பத் தலைவிகள் சேமிப்பை அதிகரிப்பர். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பணவரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். உடல் சோர்வடையும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

விருச்சிகம்

பிரபலமானவர்களால் நன்மை உண்டு. மாணவர்கள் சாதனை படைப்பர். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். காதலர்கள் கவனமுடன் பழகுவது நல்லது. உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

தனுசு

பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பளியுங்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உடல் பலம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மகரம்

வெளியூர் பயணம் தள்ளிப் போகும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் நிம்மதி கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். தேகம் பொலிவடையும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கும்பம்

அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் பொன்வண்ணம்

மீனம்

வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மனைவியிடம் விட்டுக் கொடுங்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை