இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (22.02.2026) : நினைத்த காரியம் வெற்றி பெறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

பிப்ரவரி 22

கிழமை ஞாயிறு கிழமை

தமிழ் வருடம் விசுவாவசு

தமிழ் மாதம் மாசி

நாள் 10

ஆங்கில தேதி 22

மாதம் பிப்ரவரி

வருடம் 2026

நட்சத்திரம் இன்று மாலை 06-55 வரை அஸ்வினி பின்பு பரணி

திதி இன்று பிற்பகல் 12-17 வரை பஞ்சமி

பின்பு சஷ்டி

யோகம் சித்த யோகம்

நல்ல நேரம் காலை 07-30 to 8-30

நல்ல நேரம் மாலை 1-30 to 2-30

ராகு காலம் மாலை 4-30 to 6-00

எமகண்டம் காலை 12-00 to 1-30

குளிகை காலை 3-00 to 4-30

கௌரி நல்ல நேரம் காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம் மாலை 1-30 to 2-30

சூலம் மேற்கு

சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டு வேலையும் அதிகரிக்கும். இரண்டையுமே சமாளித்துக் காட்டுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். தேகம் சிறக்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம் வான்நீலம்

ரிஷபம்

பங்குச் சந்தையில் கவனம் தேவை. ஆன்லைன் தொழில் சிறக்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். எதிர்பார்த்த ஒரு நபர் தங்களுக்கு உறுதுணையாக இருப்பார். வங்கிக் கடனை அடைப்பர். நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மிதுனம்

குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் கொள்வர். உடல் நிலை மேம்படும். சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவீர்கள். வழக்கறிஞர்கள் செழிப்பர். மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

கடகம்

அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். ஊடல் புரிந்த காதலர்கள் இணைவர். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் கருநீலம்

சிம்மம்

வியாபாரிகளின் புதிய திட்டங்கள் நிறைவேறும். பண வரவில் சற்று தாமத போக்கே நிலவும். மாணவர்கள் தங்கள் ஆசிரியரிடம் பாராட்டைப்பெறுவர். காதலர்களிடையே ஊடல்கள் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

துலாம்

பணவரவு அதிகரிக்கும். வங்கியில் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தொகை வைப்புநிதியாக செலுத்துவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மார்கெட்டிங்பிரிவினர் தேக வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணம் அதிகமாகும். ஆதலால், இளநீர் மற்றும் மோர் அருந்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் பண விசயமான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும்.நண்பர்களிடையே சிறு மனஸ்தாபங்கள் நேரலாம். மாணவர்கள் சாதனைப் படைப்பர்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

தனுசு

பெண்கள் கணவரிடம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.வெளியூர் பயணம் தடைபடும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். விவசாயிகளுக்கு தேவையான கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்

வியாபாரிகளுக்கு லாபம் கூடும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கும்பம்

தாய்வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும். உடல் நிலை மிகவும் மந்தமாக இருக்கும். சுறுசுறுப்பு அவசியம். தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு.மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மீனம்

செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். பார்த்துக் கொண்டீர்கள். சகோதரர்களிடையே பாகப் பிரிவினையில் சில குளறு படிகளும் நடக்க வாய்ப்புண்டு.ஆதலால் பெரியோர் முன்னிலையில் பேசித் தீர்ப்பது நல்லது. மாணவர்கள் அரசுத் தேர்வில் வெற்றி வாகை சூடுவர்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை