கிழமை: சனிக்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மாசி
நாள்: 16
ஆங்கில தேதி: 28
மாதம்: பிப்ரவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று காலை 09-51 வரை புனர்பூசம் பின்பு பூசம்.
திதி: இன்று இரவு 09-03 வரை துவாதசி பின்பு திரயோதசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 07-30 to 08-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: காலை 9-00 to 10-30
எமகண்டம்: மாலை 1-30 to 3-00
குளிகை: காலை 6-00 to 7-30
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 9-30 to 10-30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: மூலம்
மேஷம்
எதிர்பார்த்தபடி தாங்கள் நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். பொழுதுபோக்குக்காக குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
ரிஷபம்
வேலையில் இடமாற்றம் ஏற்படும். புதிய ஏஜென்சி கிடைக்கும். பெண்களுக்கு பிடித்த வரண் அமையும். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மிதுனம்
குடும்பத் தலைவிகள் தங்கள் விருப்பங்கள் வியாபாரிகளிடையே போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கடகம்
பணவரவு சுமாராக இருக்கும். தம்பதிகளின் புரிதல் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் விட்டுக்கொடுப்பர். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண்ணாடி அணிய வேண்டி வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
சிம்மம்
பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடனுதவி கிடைக்கும். உத்யோகஸ்தர்களிடையே நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
துலாம்
தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வெளியூர் செல்லும் திட்டம் பலிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். உடல் நலத்தில் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
பெண்களின் எண்ணம் பலிக்கும். பிள்ளைகளுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்கு சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் நன்கு படிப்பர். மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். புதிய தொழில் துவங்குவர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
தனுசு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மகரம்
குடும்பத் தலைவிகள் குடும்பத்துடன் குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வர். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். உல்லாச பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். பெண்கள் அழகு நிலையங்கள் சென்று வருவார்கள். வியாபாரத்தில் நினைத்த இலக்கை அடைவீர்கள். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
மீனம்
குடும்ப விசயத்திற்காக தம்பதிகள் இருவரும் இணைந்து முடிவெடுப்பர். வெளியூர் பயணம் லாபம் தரும். காதல் கைகூடும். மார்கெட்டிங் பிரிவினர்களின் இலக்கு பூர்த்தியடையும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். வியாபாரம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு