விசுவாவசு வருடம் மாசி மாதம் 20-ம் தேதி புதன்கிழமை
நட்சத்திரம்: இன்று காலை 8.23 வரை பூரம் பின்பு உத்திரம்
திதி: இன்று மாலை 5.43 வரை பிரதமை பின்பு துவிதியை
யோகம்: அமிர்த யோகம்
நல்ல நேரம்: காலை 9.30 - 10.30, மாலை 1.30 - 2.30
ராகு காலம்: மாலை 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
கௌரி நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 6.30 - 7.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: அவிட்டம்
பணவிஷயத்தில் செலவு செய்யும்போது கவனமாக கையாளவும். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்குவது நல்லது. கலைஞர்களின் படைபாற்றல் அதிகரிக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆனால், நினைத்த அளவிற்கு ஆர்டர்களை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
உத்யோகத்தில் மதிப்புக்கூடும். அரசால் நன்மைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மாணவர்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது. அண்ணன் மற்றும் தம்பி உறவுகள் தேடி வருவர். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
வியாபாரத்தில் புது திட்டங்கள் பலிக்கும். தள்ளுபடி செய்து விற்பனையை அதிகரிப்பர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வு நெருங்குவதால் நன்கு படிப்பர். வரவேற்பு அதிகரிக்கும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். காதலர்களுக்கு வீட்டில் சம்மதம் கிடைக்கும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
இன்று தங்கள் வியாபாரத்தினை வெளிநாட்டில் நிலை நாட்ட செய்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உடல் நிலையில சளி தொந்தரவு வந்து போகும். பெற்றோர் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். மனைவி தங்கள் சொல்படி நடப்பார். உறவினர்களின் அன்புத் தொல்லை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். கடன் அடைப்பதற்காக மற்றவர்களிடம் கடன் வாங்குவது தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். அதன் வாயிலாக வியாபாரம் விரிவாகும். தம்பதிகளிடையே ஊடல் வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
பங்குச் சந்தையில் லாபம் கிட்டும். உத்யோகத்தில் தங்களுக்குண்டான பதவி உயர்வு கிடைக்கும். காதல் கண்சிமிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வர். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். சில்லரை வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
இன்று உங்களின் மன உறுதி மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு எதிர்பார்த்ததை விட சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்தி உண்டு. நண்பர்களின் ஆதரவு உறுதியானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு
தொழிலில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள்.உங்கள் பேச்சுத் திறனைக் கொண்டு வெற்றி காண்பீர்கள். படிப்பில் ஆர்வம் பிறக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசினை பெற்று மகிழ்வீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
நண்பர்களின் ஆதரவால் பல நன்மை நடக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களால் தங்கள் வேலையை பகிர்ந்து நேரத்தை மிச்சப்படுத்துவர். தம்பதிகளிடையே வீண் வாதம் வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
குடும்பத் தலைவிகள் புதிய சேமிப்பு திட்டத்தில் இணைவார்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். தங்கள் வழக்கு சாதகமாகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு பெரிய பெரிய ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். இருவரும் இணைந்து குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
நவீன பொருட்களை இன்று வாங்குவீர்கள். ஒரு சிலர் ஆடை, அணிகலன்கள் சேர்ப்பர். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். புதிய தொழில் துவங்குவீர்கள். மருத்துவர்கள் சாதனை படைப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு