கிழமை: சனிக்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மாசி
நாள்: 30
ஆங்கில தேதி: 14
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று அதிகாலை 2-17 வரை பூராடம் பின்பு உத்திராடம்.
திதி: இன்று காலை 07-22 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 07-30 to 08-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: காலை 9-00 to 10-30
எமகண்டம்: மாலை 1-30 to 3-00
குளிகை: காலை 6-00 to 7-30
கௌரி நல்ல நேரம்: காலை 12-45 to 01-30
கௌரி நல்ல நேரம்: மாலை 9-30 to 10-30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: திருவாதிரை
மேஷம்
பணவரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தலைவிகள் ஆலயம் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் ஆர்வம் மிகும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
ரிஷபம்
ஆன்லைன் வியாபாரம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலையில் பளு இருந்தாலும், அதனை இலகுவாக செய்து முடிப்பீர்கள். நினைத்த நபரை சந்திப்பீர்கள். காதலில் வெற்றி உண்டு. திருமணம் கைகூடும். ஏற்ற துணை அமைவார். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மிதுனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனம் தேவை. யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். கடனில் ஒரு பகுதியை அடைத்துவிடுவீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
சிம்மம்
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் நட்பு பலப்படும். உணவு விசயத்தில் கட்டுப்பாடு அவசியம். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இயற்கை மருத்துவத்தால் சரியாகும். புதிய நபர்கள் நட்பை உடனே நம்ப வேண்டாம். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி
வியாபாரிகள் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இருப்பதை விற்பனை செய்வது நல்லது. அரசியலில் ஆர்வம் மிகும். பணப் புழக்கம் மிகும். பயணத்தின் போது கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமையற்கலையில் ஆர்வம் கூடும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
தம்பதிகள் சேர்ந்த முடிவெடுப்பர். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்காது. பத்திரிகையாளர்கள் கோரிக்கை நிறைவேறும். வியாபாரிகளின் எண்ணம் ஈடேறும். மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
சுப காரியம் கைகூடும். எதிர்பாலினரிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. பொதுசேவையில் மனம் ஈடுபடும். விற்பனைபிரதிநிதிகளுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
பயணங்கள் வெற்றி தரும். வழக்கில் தங்களுக்கு முக்கியமான திருப்பம் ஏற்படும். நண்பர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவர். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மகரம்
பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுது போக்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வேலைகள் தாமதமானாலும் இறுதியில் முடித்துவிடுவீர்கள். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். சோர்வு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தை சிறப்பாக முடியும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மாணவர்களுக்கு இன்னும் கடின உழைப்பு தேவைப்படும். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு