மார்ச் 26
கிழமை: வியாழக்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: பங்குனி
நாள்: 12
ஆங்கில தேதி: 26
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று மாலை 07.05 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
திதி: இன்று பிற்பகல் 02.56 வரை அஷ்டமி பின்பு நவமி
யோகம்: மரண, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 10.30 - 11.30
நல்ல நேரம் மாலை: 12.30 - 01.30
ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00
எமகண்டம் காலை: 6.00 - 07.30
குளிகை காலை: 09.00 - 10.30
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 07.30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
மேஷம்
இந்த நாளில் கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். காரியம் ஒன்று எளிதில் முடியும். பெண்கள் தங்கள் கணவரின் மனம் கோணாதவாறு நடப்பது நல்லது. கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். விசா முயற்சிகள் பலிதமாகும். பணம் பல வழிகளில் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
ரிஷபம்
இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வெளிமக்கள் தொடர்பு அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் செலவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
மிதுனம்
காதலர்களின் அன்பு பலப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். பேச்சாளர்களுக்கு பாராட்டும்,மதிப்பும் கூடும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். நல்ல விளைச்சல் உண்டாகும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கநிறம்
சிம்மம்
பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பண உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய நேரம். வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை கைக்கு வந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
துலாம்
பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார். திடீர் பயணம் உற்சாகம் தரும். பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்வர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். பணத்தை தாராளமாக செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். தம்பதிகளிடையே அன்பு குறையாது.
அதிர்ஷ்ட நிறம்: கடல்பச்சை
மீனம்
பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் மனவருத்தம் ஏற்படக் கூடும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். உடல் நலனில் அக்கறைத் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா