மார்ச் 27
கிழமை: வெள்ளிக்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: பங்குனி
நாள்: 13
ஆங்கில தேதி: 27
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம் : இன்று மாலை 05.48 வரை புனர்பூசம் பின்பு பூசம்
திதி: இன்று பிற்பகல் 12.52 வரை நவமி பின்பு தசமி
யோகம்: சித்த, மரண யோகம்
நல்ல நேரம் காலை: 09.30 - 10.30
நல்ல நேரம் மாலை: 04.30 - 5.30
ராகு காலம் காலை: 10.30 - 12.00
எமகண்டம் மாலை: 3.00 - 4.30
குளிகை காலை: 07.30 - 09.00
கௌரி நல்ல நேரம் காலை: 12.30 - 1.30
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்
மேஷம்
வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர். தேக ஆரோக்கியம் சீர்படும் உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
ரிஷபம்
வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். கடன் பிரச்சினை தீரும். மனதில் தன்னம்பிக்கை ஒளிரும். பெற்றோர் தங்கள் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை
மிதுனம்
பண வரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் மனம் நாடும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் குவியும். தங்கள் பிள்ளையின் நடவடிக்கைகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உடல் நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
கணவன்- மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகி வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தேக பலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
தொழில் அதிபர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். பங்கு சந்தை உயரும்.. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. கல்யாணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாகு;ம். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்..
அதிர்ஷ்ட நிறம்: கடல்பச்சை
கன்னி
வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வியாபாரத்தில் புது தொழில் நுட்பங்களை கையாள்வீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் கடமையை செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இதுவரை விலகியிருந்த நண்பர் தேடி வருவர். அக்கம்- பக்கம் வீட்டாருடன் சமரசமாக போவது நல்லது. வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். மறக்க முடியாத சம்பவம் நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரியால் நன்மை உண்டு. நினைத்த காரியம் முடியும் நாளாக அமையும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பர். பங்குச் சந்தையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
தனுசு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
ஏஜென்சி துறையினருக்கு அதிக சதவீதம் லாபம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கலைஞருக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்பு கிடைக்கும். பிரபலங்களுடன் திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரம் விருத்தியடையும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
கும்பம்
இன்று கிடப்பில் இருந்த வேலைகள் முடியும். எதிரிகள் சரணடைவர். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. நண்பர்கள் விட்டுக்கொடுப்பர். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வீட்டிற்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மீனம்
உடன்பிறந்தவர்கள் பக்கபலமுடன் இருப்பர். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் செயலில் உற்சாகம் வெளிப்படும். புது தொழில் துவங்குவீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன சேர்க்கை உண்டு. பிரபலங்களின் திடீர் சந்திப்பு உற்சாகத்தைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்