இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 28.01.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் தை மாதம் 15ம் தேதி

நட்சத்திரம்: இன்று காலை 09.20 வரை பூராடம் பின்பு உத்திராடம்

திதி: இன்று இரவு 08.09 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 07.30 - 11.30

நல்ல நேரம் மாலை: 01.30 - 02.30

ராகு காலம் மாலை: 03.00 - 04.30

எமகண்டம் காலை: 09.00 - 10.30

குளிகை மாலை: 12.00 - 01.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 07.30 - 08.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: திருவாதிரை

ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உடல் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

ரிஷபம்

குலதெய்வக் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பீர்கள். தியானம் மேற்கொள்வீர்கள். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர்.. இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். வியாபாரிகளிடம் வியாபார யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்

மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்த வேலைகளில் தங்களுக்கே வெற்றி நிச்சயம். நட்பு வட்டம் விரிவடையும். உற்சாகமான தினமாக இன்று அமையும். வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும்.உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர். மனைவிவழி உறவினர்களுடன் மீண்டும் இணைவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். உங்கள் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்று உங்களுக்கு பெருமையைத் தேடித்தருவர். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த பாடம் இன்று கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மீனம்

வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொண்டு அதிக லாபத்தை அடைவர். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களின் ஆலோசனையை பரிசீளித்துப் பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை