வசாய்,
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க முயன்ற கும்பலை சேர்ந்த 12 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஏ.டி.எம். கொள்ளை முயற்சி
பால்கர் மாவட்டம் மனோர் அருகே நெவ்லி பாட்டா பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அருகே அதிகாலை 3.30 மணி அளவில் சந்தேகப் படும்படியான கும்பல் நடமாடி வருவதை ரோந்து சென்ற போலீசார் கவனித்தனர். உடனே அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு நடமாடிய கும்பலை சுற்றி வளைத்து 12 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம். மையத்தை கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது.
12 பேர் கைது
கும்பலிடம் இருந்து அரிவாள், கத்தி, 3 மெட்டல் கட்டர், நைலான் கயிறு, வேன், டெம்போ போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 56 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். இவர்கள் பால்கர், தானே மற்றும் மும்பையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. வேறு ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.