மும்பை

கொள்ளை முயற்சியில் ஏ.டி.எம். தீப்பற்றியது- ரூ.4 லட்சம் எரிந்து நாசம்

புனே அருகே கொள்ளை முயற்சியில் ஏ.டி.எம். எந்திரம் தீப்பற்றி அதில் இருந்த ரூ.4 லட்சம் நோட்டுகள் எரிந்து நாசம் அடைந்தது.

புனே, 

புனே அருகே கொள்ளை முயற்சியில் ஏ.டி.எம். எந்திரம் தீப்பற்றி அதில் இருந்த ரூ.4 லட்சம் நோட்டுகள் எரிந்து நாசம் அடைந்தது.

தீப்பற்றியது

புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதி குதல்வாடியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையம் சம்பவத்தன்று அதிகாலை தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை முயற்சியில் அந்த ஏ.டி.எம். எந்திரம் தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

ரூ.4 லட்சம் நாசம்

அதாவது, கொள்ளையன் ஒருவன் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்துள்ளான். அவன் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஸ்பிரே மூலம் கருப்பு பெயிண்ட் அடித்து விட்டு, கியாஸ் கட்டரால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அது தீ பிடித்து எரிந்தது. இதில் ஏ.டி.எம். எந்திரத்துக்குள் இருந்த ரூ.3 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது.

இதுபற்றி சிக்காலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்