மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் ஏ.டி.எம் மையம், கட்டபெட்டு பஜாரில் உள்ளது. இந்தநிலையில் வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது எந்திரத்தின் முன்பகுதியை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்து மர்ம ஆசாமி ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.