அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் மடுகரை மெயின்ரோடு அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 20). இவருக்கும், எதிர்வீட்டை சேர்ந்த தம்பா என்ற தமிழரசன் (37), தேவசங்கீதன் (22), ராம் (19) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் இரும்பு கரண்டியால் காத்திகேயனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.