நாகப்பட்டினம்,
தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சங்கம் சார்பில் நாகையில் பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜோதிபாசு கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்க மாநில துணைத்தலைவர் செல்வன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மருத்துவபணியாளர்களை பணியிடம் மாற்றம் செய்ததை ரத்து செய்யவேண்டும். ரத்து செய்யவில்லையென்றால் துணைஇயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மருத்துவ பணியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். மருத்துவ பணியாளருக்கு விருப்ப பணி மாறுதல் வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 8-ந்தேதி மாவட்ட துணைஇயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜ சேகர் நன்றி கூறினார்.