இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர், ரத்தன் லிங்கா.
அந்த நகரத்துக்குள் சைக்கோ காமக்கொடூர கொலைகாரர்கள் 5 பேர் ஊடுருவுகிறார்கள். அவர்களின் பார்வை ஜூலி என்ற பெண் மீது விழுகிறது. அவர்களிடம் இருந்து ஜூலி தப்பித்தாரா, இல்லையா? என்பது கதை. கதாநாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்கிறார்கள். திகிலும், திருப்பங்களும் கொண்ட படமாக லாக் தயாராகிறது.