சினிமா துளிகள்

திரில்லர் திரைப்படமாக உருவாகும் 'அவள் பெயர் ரஜ்னி'.. போஸ்டர் வெளியீடு

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வருகிறது.

தினத்தந்தி

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் வெற்றிக்குப் பிறகு காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட இப்படத்தின் முதல்தோற்ற போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு