உலகம் முழுவதும் அதிகமாக பயிரிடப்படும் தாவரங்களில் ஒன்றான பார்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 'வாற்கோதுமை' என்று அழைக்கப்படும் பார்லி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
இதில் 3.3 கிராம் புரதமும், 19.7 சதவீதம் கால்சியமும், 0.4 சதவீதம் கொழுப்புச் சத்தும் உள்ளது. இதுதவிர நார்ச்சத்து, மாலிப்டினம், மாங்கனீசு, செலினியம், தாமிரம், வைட்டமின் பி, குரோமியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், நியாசின், ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆன்டி நியூட்ரியன்கள் போன்ற சத்துக்களும் பார்லியில் நிறைந்துள்ளன.
பார்லியை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டி சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.