மும்பை,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ)என்ற அமைப்பிற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பில் இருந்து பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் விசாரணை நடத்தி பலரை கைது செய்தனர்.
இந்தநிலையில் நவிமும்பை நெரூல் செக்டர் 23-ம் பகுதியில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலக பெயர் பலகையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.