மாவட்ட செய்திகள்

காணொலி காட்சி மூலம் பகவத்கீதை இ-புக்கத்தை பிரதமர் வெளியிட்டார்

காணொலி காட்சி மூலம் பகவத்கீதை இ-புத்தக்கத்தை பிரதமர் வெளியிட்டார்.

கரூர்

சுவாமி சித்பவானந்தர் இயற்றிய ஸ்ரீமத் பகவத்கீதை ஆங்கில விளக்க உரை இ-புத்தகமாக தயாரிக்கப்பட்டது. இந்த புத்தகம் சுவாமி சித்பவானந்தரின் 123-வது பிறந்தநாளான நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு பேசினார். இதனை கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். மேலும் காணொலி மூலமும் ஏராளாமனோர் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண தபோவனத்தினர் செய்திருந்தனர்.