கரூர்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று (திங்கட்கிழமை) கரூர் வருகிறார். அவருக்கு கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மதுரை பைபாஸ் சாலை, முருகன் ரெசிடென்சி அருகில் கரூர் மாவட்ட பா.ஜ.க. அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணி உள்பட பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.