நெல்லை:
கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரையை சேர்ந்தவர் அனந்தகுமாரி (வயது 43). இவர் நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய அனந்தகுமாரி, கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்து ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.