மும்பை

அகோலாவில் கார் மீது பஸ் மோதிய விபத்து; முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர் காயம்

அகோலாவில் கார் மீது பஸ் மோதிய விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்

தினத்தந்தி

மும்பை,

புல்தானா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. விஜய்ராஜ் ஷிண்டே (வயது58) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் அமராவதி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். மதியம் 12 மணி அளவில் அகோலா மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை குரான்கேட் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த பஸ் ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட காரில் இருந்த 4 பேர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு அகோலாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்த 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்