வணிகம்

’புல்லட்’ மோட்டார் சைக்கிள்களை இனி ஆன்லைனிலேயே வாங்கலாம்

வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கும் முறையை எளிதாக்கும் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னையை தலைமையிடமாக கொண்ட புகழ்பெற்ற ராயல் என்பீல்டின் 350 சிசி மோட்டார் சைக்கிள்கள், முதல்முறையாக ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளன. புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, கோன் கிளாசிக் 350 மற்றும் புதிய மீட்டியோர் 350 ஆகிய மாடல்கள் செப்டம்பர் 22-ந்தேதி முதல் பிரபல ஆன்லைன் தளத்தில் கிடைக்கும்.

இந்த முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கும் முறையை எளிதாக்கும் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதாக மோட்டார் சைக்கிள்களை ஆராய்ந்து வாங்கவும், பல்வேறு கட்டண விருப்பங்களை பயன்படுத்தவும் இது வழிவகுக்கும். மோட்டார் சைக்கிள்கள் வினியோகம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை ராயல் என்பீல்டின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் கையாளுவார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை