வணிகம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சஸ்பெண்டு செய்து வைத்திருக்கும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் தொடங்கின.

தினத்தந்தி

மும்பை,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 75க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர விரிவிதிப்பை அமல்படுத்துவதாக கடந்த 2 ஆம் தேதி அறிவித்தார். டிரம்ப் அறிவித்த மறுநாளில் ஆசிய, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே, பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பிறகு பங்குச்சந்தைகள் ஏற்றம் காணத்தொடங்கியுள்ளன.

அந்த வகையில் பங்குச்சந்தையில் இன்றும் ஏற்றம் ஏற்பட்டது. இன்று காலை வர்த்தக தெடக்கத்தின் பேது சென்செக்ஸ் 1061.26 புள்ளிகள் உயர்ந்து, 74,941.53 ஆக இருந்தது. அதேபேல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 354.90 புள்ளிகள் உயர்ந்து 22,754.05 ஆக இருந்தது. சர்வதேச சந்தைகளில் பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளின் ஏற்றம் ஏற்பட்டு இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதேநேரத்தில், மற்ற ஆசியப் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து