தங்கம்

தங்கம், வெள்ளி விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை மீண்டும் ஏற்ற-இறக்கத்துடன் நீடிக்கிறது. நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,820-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

05.05.2026 ஒரு சவரன் ரூ.1,10,560 (இன்று)

02.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000

01.05.2026 ஒரு சவரன் - ரூ.1,11,360

30.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800

29.04.2026 ஒரு சவரன் ரூ.1,11,200

28.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800