தங்கம்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரம் என்ன?

விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால் கடந்த 26-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது.

அதை தொடர்ந்து, நேற்று முன்தினமும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று (29-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும்  வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

29.09.2025 ஒரு சவரன் ரூ.85,600 (இன்று)

27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120

26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400

25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080

24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800