தங்கம்

ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்த தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன.?

காலையில் குறைந்திருந்த தங்கம் விலை, மாலையிலும் குறைந்து விற்பனையாகி வருகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலால் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.

தங்கம் விலை

சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்து 775-க்கு விற்பனையானது. சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கு விற்றது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 660-க்கு விற்றது. சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது.

காலை நிலவரம்

இன்று காலை தங்கம் விலை குறைந்திருந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,25,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மாலை நிலவரம்

இந்த நிலையில், இன்று மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,23,720 -க்கும், கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,465-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே, அதாவது ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு_சவரன்)_ நிலவரம்:-

03.03.2026 - ஒரு சவரன்- ரூ.1,23,720

02.03.2026 ஒரு சவரன் - ரூ.1,25,280

01.03.2026 ஒரு சவரன் ரூ.1,26,200

28.02.2026 ஒரு சவரன் - ரூ.1,24,400

27.02.2026. ஒரு சவரன் ரூ.1,19,200

26.02.2026 ஒரு சவரன் ரூ.1,19,360