தங்கம்

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன.?

9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தங்கம் விலை

2025-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம், வெள்ளி விலை அதிக ஏற்றத்தை கண்டுவந்து, அவ்வப்போது புதிய உச்சத்தை தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. அதிலும் சமீப காலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலையானது மிகவும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.99,040-க்கு விற்கப்பட்டது. 20-ந்தேதி தங்கம் விலை ரூ.99,200 ஆக உயர்ந்தது. 22-ந்தேதி மேலும் அதிகரித்து ரூ.1,00,560-க்கு விற்கப்பட்டது. 23-ந்தேதி மீண்டும் உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனையானது. 24-ந்தேதி பவுன் விலை ரூ.1,02,400 ஆக உயர்ந்தது. 25-ந்தேதி மேலும் உயர்ந்து ரூ.1,02,560-க்கு விற்கப்பட்டது. 26-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1,03,120 ஆக அதிகரித்தது. நேற்று முன் தினம் தங்கம் விலை பவுன் ரூ.1,04,000-க்கு உயர்ந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால், விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், 9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து 2,76,000க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து 276க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை