தங்கம்

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஈரான் - அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2-ந்தேதி முதல் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், நேற்று முன் தினம் விலை அதிகரித்தது.

நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால், நேற்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளிவிலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே, அதாவது, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

09.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600 (இன்று)

08.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,400 (நேற்று)

07.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

06.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680

05.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960