தங்கம்

ஒரே நாளில் 2-வது முறையாக அதிகரித்த தங்கம் விலை.!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5,200 அதிகரித்துள்ளது.

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

இதனிடையே நேற்று சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1, 21, 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15, 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000 விற்பனை செய்யப்படுகிறது.

இன்று பிற்பகல் நிலவரம்;

இந்த நிலையில், தங்கம் விலை இன்று பிற்பகலில் 2-வது முறையாக அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,24,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,550-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. பிற்பகலில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.310-க்கும், ஒரு கிலோ ரூ.3,10,000 விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு சவரன்) நிலவரம்

29.02.2026 - ரூ.1,24,400

28.02.2026 - ரூ.1,21,600

27.02.2026 - ரூ.1,19,200

26.02.2026 - ரூ.1,19,360

25.02.2026 - ரூ.1,19,440

24.02.2026 - ரூ.1,19,120