சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வேகமாக உயர்ந்து வந்தது. தாறுமாறாக விலை உயர்ந்ததாலும், ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக இந்த விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,23,720 -க்கும், கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,465-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 -க்கும், கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்த வரையில் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,240 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிவிலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே அதாவது, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
05.03.2026 ஒரு சவரன்- ரூ.1,20,960
04.03.2026 ஒரு சவரன்- ரூ.1,21,600
03.03.2026 ஒரு சவரன்- ரூ.1,23,720
02.03.2026 ஒரு சவரன்- ரூ.1,25,280
01.03.2026 ஒரு சவரன்- ரூ.1,26,200
28.02.2026 ஒரு சவரன்- ரூ.1,24,400