சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 25-ந்தேதி உயர்ந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் விலை குறைந்து, பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் சற்று விலை குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 670-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.380-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 40-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், கடந்த சில நாட்களாக சரிந்து வந்த வெள்ளியும் நேற்று அதிரடியாக உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளதும், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று சரிந்துள்ளதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தை நோக்கித் திரும்புவதும், டாலர் பலவீனம் அடையும்போது, மற்ற நாடுகளின் கரன்சிகளுக்கு தங்கம் மலிவாக தெரிவதால் அதன் தேவை அதிகரிப்பதும் விலை ஏற்ற, இறக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.
02.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (இன்று)
01.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,400 (நேற்று)
31.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,360
30.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,160
29.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,280