தங்கம்

மேலும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலைமாற்றமின்றி நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி உயர்ந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் விலை குறைந்து, பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வந்தது.

கடந்த சில நாட்களாக பெரிய அளவில் உயர்வு இல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்தது. பின்னர் மாலையில் கூடுதலாக கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் சரிந்தது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,800-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலைமாற்றமின்றி நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

04.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (இன்று)

03.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,800 (நேற்று)

02.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,000

01.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,400

31.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,360

30.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,160