சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஈரான் - அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2-ந்தேதி முதல் தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்து இருந்தது.
நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 960-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் வந்திருந்தது.
வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,520 குறைந்திருந்தநிலையில், இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
வெள்ளிவிலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே, அதாவது, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
07.03.2026 ஒரு சவரன்- ரூ.1,20,400 (இன்று)
06.03.2026 ஒரு சவரன்- ரூ.1,19,680 (நேற்று)
05.03.2026 ஒரு சவரன்- ரூ.1,20,960
04.03.2026 ஒரு சவரன்- ரூ.1,21,600
03.03.2026 ஒரு சவரன்- ரூ.1,23,720
02.03.2026 ஒரு சவரன்- ரூ.1,25,280