தங்கம்

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையில் நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று 3-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

14.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,18,080 (இன்று)

13.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,200 (நேற்று)

12.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,760

11.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,960

10.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,400

09.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,600