சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த 12-ந்தேதிக்கு பிறகு தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 23, 24-ந்தேதிகளில் ஒரே நாளில் விலை ஏற்றம்-இறக்கத்தை சந்தித்தது. கடந்த 28-ந்தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாட்கள் விவரம்:-
30-03-2026 - ஒரு பவுன் 1,08,800
28-03-2026- ஒரு பவுன் ரூ.1,09,280
27-03-2026- ஒரு பவுன் ரூ.1,07,440
26-03-2026- ஒரு பவுன் ரூ.1,06,800
25-03-2026- ஒரு பவுன் ரூ.1,08,800