தங்கம்

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும். கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால், நேற்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று 4-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.276-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

16.03.2026 ஒரு சவரன் - ரூ.1,17,680 (இன்று)

15.03.2026 ஒரு சவரன் - ரூ.1,18,080 (நேற்று)

14.03.2026 ஒரு சவரன் - ரூ.1,18,080

13.03.2026 ஒரு சவரன் - ரூ.1,19,200

12.03.2026 ஒரு சவரன் - ரூ.1,19,760