தங்கம்

போர் சூழலில் இறங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலை தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலால் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.

சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்து 775-க்கு விற்பனையானது. சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கு விற்றது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 660-க்கு விற்றது. சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது.

இதேபோல வெள்ளியின் விலையும் சற்று சரிவடைந்திருந்தது. வெள்ளி ஒரு கிராம் நேற்று முன்தினம் ரூ.325-க்கு விற்றது. இதில் இருந்து நேற்று ரூ.10 குறைந்து ரூ.315-க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனையானது. கிலோ ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் குறைந்து ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்திற்கு விற்றது.

இந்தநிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,25,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே, அதாவது ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு சவரன்) நிலவரம்:-

03.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,25,200

02.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,25,280

01.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,26,200

28.02.2026 - ஒரு சவரன் - ரூ.1,24,400

27.02.2026. - ஒரு சவரன் - ரூ.1,19,200

26.02.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,360