தங்கம்

மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த 23, 24 மற் றும் 26-ந்தேதிகளில் ஒரே நாளில் ஏற்றம்-இறக்கம் காணப்பட்டது. இப்படி தங்கம் விலை இருந்த சூழலில், நேற்று உயர்ந்து இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 430-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்று குறைந்து இருந்தது. கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

28.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,280 (இன்று)

26.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,07,440 (நேற்று)

26.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800

25.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

24.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,000

23.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,720