சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் விலை குறைந்த சூழலில், நேற்று விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து காணப்பட்டது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
09.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,000 (இன்று)
08.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 (நேற்று)
07.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,920
05.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600
04.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600