தங்கம்

மாற்றமின்றி விற்பனையாகும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் தொடர்ந்து ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வந்ததை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட விலையிலேயே தங்கம் விலை காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி அந்த நிலையையும் எட்டியது.

கடந்த 31-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 63,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்தது.

இந்நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.63,440-க்கும், ஒரு கிராம் ரூ.7,930-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

SCROLL FOR NEXT