தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. தினமும் புதிய உச்சம் என்ற பாணியில் அதன் விலையை கேட்டாலே விழிபிதுங்கும் நிலை உள்ளது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டு உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபநாட்களாக காலை மற்றும் பிற்பகல் என 2 நேரங்களில் விலை மாற்றம் இருந்து வருகிறது.
இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.370, சவரனுக்கு ரூ.2,960-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.1,24,880-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் இன்று மாலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.400-க்கும், ஒரு கிலோ 4 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.