தங்கம்

காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை...!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தங்கத்தின் விலை நாளுக்குநாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்தை கடந்தது. இது தங்க முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுத்தந்தது. அதேவேளை நகை வாங்கும் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதனிடையே, சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், காலை அதிகரித்த தங்கம் விலை மாலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று மாலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 12, 800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று மாலை வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 குறைந்து ரூ.2,77,000க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமிற்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.277க்கு விற்பனை செய்யப்பட்டது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை