கோப்புப்படம் 
தங்கம்

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம், வெள்ளி விலையில் சமீபகாலமாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் உயர்ந்து ஒரு சவரன், ரூ.1,20,400-க்கும், ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் 1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.