வணிகம்

சரிவுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள்; ரூபாயின் மதிப்பும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் சரிந்து ரூ.86.96 ஆக உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு 201.44 புள்ளிகள் சரிந்து 75,795.42 புள்ளிகளாக இருந்தது. நேற்று லாபத்துடன் தொடங்கிய நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.

இதன்படி, மும்பை பங்கு சந்தையில் டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., இன்டஸ்இன்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

எனினும், டெக் மகிந்திரா, மாருதி, இன்போசிஸ், எச்.சி.எல். டெக் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வர்த்தக தொடக்கத்தில் லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 82.65 புள்ளிகள் சரிந்து 22,876.85 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் சரிந்து ரூ.86.96 ஆக உள்ளது.

ஆசியாவில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகளில் வர்த்தகம் லாபத்துடனேயே காணப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து