வணிகம்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை ஏற்கும் தபால் நிலையங்கள்

தபால் நிலையங்களில் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து யு.பி.ஐ. மூலமாக கட்டணங்கள் செலுத்துவது அமல்படுத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

இந்தியாவில் யு.பி.ஐ. என்னும் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகள் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ஆன்லைன் முதலீடுகள் வரை யு.பி.ஐ. மூலமாக நிதி பரிவர்த்தனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அரசு தபால் நிலையங்களில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மூலமாக கட்டணங்கள் செலுத்துவது இல்லாமல் இருந்தது.

சிலமாதங்களுக்கு முன்பு இந்த நடைமுறை இருந்தபோதிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் தொழில்நுட்ப சிக்கல்கள் அனைத்தையும் இந்திய தபால்துறை சீரமைத்துள்ளது. இதனால் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தபால் நிலையங்களில் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து யு.பி.ஐ. மூலமாக கட்டணங்கள் செலுத்துவது அமல்படுத்தப்பட உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து