வணிகம்

மெட்டாவுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

மெட்டாவுடன் ரிலையன்ஸ் நிறுவனம் கைகோர்க்க உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏ.ஐ) சாதிக்கும் புதிய முயற்சியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் களம் இறங்கியுள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இன்டலிஜன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவை மையமாக கொண்ட பிரபல சமூக வலைத்தள பேஸ்புக் தனது தாய் நிறுவனமான மெட்டா மூலமாக ரிலையன்ஸ் இன்டலிஜன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்க உள்ளது. இதற்காக இரு நிறுவனங்களும் ஒப்பந்தமிட்டு கூட்டாக இணைந்து முதற்கட்டமாக ரூ.855 கோடி முதலீடு செய்துள்ளது.

இதன்மூலம் அந்த நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளுக்கு சொந்தக்காரராக மெட்டா நிறுவனம் உருவெடுத்துள்ளது. இதற்குமுன்பு, பேஸ்புக், ரிலையன்ஸ் டிஜிட்டல் பிரிவான ஜியோவில் 9.99% பங்கு பெறுவதற்காக சுமார் ரூ.43,574 கோடி முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்