மும்பை,
இஸ்ரேல் - ஈரான் மோதலையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதல் உலகப்போருக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதலால் வாரத்தின் முதல் நாளான இன்று (02.03.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 312 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 865 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 689 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 839 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 305 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 564 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 48 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 238 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
201 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 289 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 814 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 67 ஆயிரத்து 324 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.