வணிகம்

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று (17.03.2026 - செவ்வாய்கிழமை) அதிரடியாக உயர்ந்தது.

அதன்படி, 172 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 581 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 462 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 876 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 209 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 724 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

567 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 70 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

121 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 736 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 547 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 663 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.