வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (18.02.2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 93 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 819 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 376 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 61 ஆயிரத்து 550 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

175 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 28 ஆயிரத்து 463 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 283 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 734 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

65 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 734 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 495 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 69 ஆயிரத்து 153 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.