மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (06.02.2026 - வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 50 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 693 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 56 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 60 ஆயிரத்து 120 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
அதேபோல், 117 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 807 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 266 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 580 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
55 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 644 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 14 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 67 ஆயிரத்து 551 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.